மடப்புரம் அஜித்குமார் லாக்கப் மரணத்தின் சுவடுகள் மறைவதற்குள், நாகர்கோவிலில் விசாரணை கைதி சபரி வர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 9-ஆம் தேதி வெறும் 200 கிராம் குட்கா வைத்திருந்ததாகக் கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரி வர்மனுக்கு, நேற்று நள்ளிரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கும் அவரது உறவினர்கள், போலீஸார் நடத்திய கடுமையான தாக்குதல் மற்றும் சித்திரவதை காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறி, மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
