தமிழகமே எதிர்பார்ப்பில்… பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை போடப்போகும் மெகா ஸ்கெட்ச்…. தமிழக அரசியலை உலுக்கப் போகும் அந்த 4 மணி அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 12, 2026

Spread the love

பொள்ளாச்சியில் இன்று நடைபெறும் ‘WE THE LEADERS’ அமைப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் மாநாட்டில் அண்ணாமலை மிக முக்கிய அரசியல் அறிவிப்பு ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் குறித்தே இந்த அறிவிப்பு அமையும் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. மாலை 4 மணியளவில் அண்ணாமலை உரையாற்றவுள்ள இந்த பிரம்மாண்ட மாநாட்டில், சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் இம்மாநாடு தற்போதே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.