“எனக்கு 2 பொண்டாட்டி.. குழந்தை வேண்டாம்”… 3-வது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது கணவன் செய்த உச்சகட்ட கொடூரம்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…!

By Devi Ramu on ஆடி 12, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிக்கபானவாரா அருகே, எசருகட்டா சாலையில் வசித்து வரும் 40 வயது முகமது பீர் என்ற நபர், தனது 8 மாத நிறைமாத கர்ப்பிணி மனைவியான ஹசீனாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. தங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்றும், வயிற்றில் வளரும் கருவைக் கலைத்துவிடுமாறும் அவர் தனது மனைவியைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மனைவி சம்மதிக்காததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த ஹசீனாவின் கழுத்தைக் கணவர் கொடூரமாக நெரித்துள்ளார்.

இதில் மயக்கமடைந்த மனைவி இறந்துவிட்டதாக எண்ணி முகமது பீர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த ஹசீனா தனது குடும்பத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, தலைமறைவாக இருந்த முகமது பீரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று இவர் சண்டை போட்ட காரணத்தினாலேயே, இவரது முந்தைய இரண்டு மனைவிகளும் இவரைப் பிரிந்து சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.