சூர்யா – ஜோதிகா மகனா இது?… முதன்முறையாக கேமராவின் முன் தேவ் செய்த காரியம்…. வைரல் வீடியோ…. மிரண்டு போன ரசிகர்கள்….!

By SATHISH R on ஆடி 12, 2026

Spread the love

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகன் தேவ் பொதுவெளியில் முதன்முறையாகப் பேசும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது. , சமீபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டுத் திட்டம் (AI Development Program) தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய அவர், இந்தத் திட்டத்தில் சேருவதற்கு முன்பே தனக்கு செயற்கை நுண்ணறிவு குறித்து ஒரு அடிப்படை புரிதல் இருந்ததாகவும், ஆனால் இதில் பங்கேற்ற பிறகு அதைப்பற்றிய மிகச் சிறந்த மற்றும் ஆழமான புரிதலைப் பெற்றதாகவும் மிகவும் தெளிவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் உருவாக்கிய புராஜக்ட் குறித்து, அங்கு வந்திருந்தவர்களுக்கு தேவ் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் விளக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு கராத்தேவில் பிளாக் பெல்ட் வென்று அசத்திய தேவ், தற்போது தொழில்நுட்ப அறிவிலும் சிறந்து விளங்குவது சூர்யாவின் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. பொதுமேடையில் எந்தவித பதற்றமும் இன்றி, அவரது நிதானமான பேச்சும், தன்னம்பிக்கை நிறைந்த குணமும், முதிர்ச்சியான விளக்கமும் ஒட்டுமொத்த இணையவாசிகளின் பாராட்டுகளையும் சூர்யா ரசிகர்களின் இதயங்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.