“இனிமேதான் ஆட்டமே இருக்கு”…. நள்ளிரவில் பறந்த போன் கால்கள்… விழிபிதுங்கி நிற்கும் திமுக மாஜிக்கள்….. கரூரில் விஜய் சொன்ன ‘அந்த’ வார்த்தை…!

By Nanthini on ஆடி 12, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி எச்சரிக்கை, தற்போதைய திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மத்தியில் கடுமையான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “ஊழல் செய்தவர்கள் அடுத்தடுத்து சட்டத்தின் பிடியில் மாட்டப் போகிறார்கள்; இனிவரும் நாள்களில் தமிழக வெற்றிக் கழக அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்” என்று மிகக் காட்டமாக எச்சரித்திருந்தார்.

இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, தங்களின் கடந்தகால செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக எந்த நேரத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்படலாம் அல்லது கைது நடவடிக்கைகள் பாயலாம் என்ற அச்சத்தில் திமுக சீனியர்கள் ஆழ்ந்துள்ளனர். இதனால் விழிபிதுங்கி நிற்கும் முக்கியப் புள்ளிகள் பலர், அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் தங்களுக்குள் ரகசியமாக செல்போன் வாயிலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலான தகவல்கள் கசிந்து வருகின்றன.