சுவாரஸ்யமான விஷயம்
பிரிட்டானியா நிறுவனம் தனது புகழ்பெற்ற மில்க் பிகிஸ் பிஸ்கட் மூலம், இன்றைய ‘இன்ஸ்டா’ தலைமுறையினருக்கு தமிழ் பண்பாட்டின் ஆகச்சிறந்த பொக்கிஷமான திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘மில்க் பிகிஸ் திருக்குறள் சேலஞ்ச்‘ என்ற ஒரு தனித்துவமான ஆக்கப்பூர்வமான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. 2,000 ஆண்டுகள் பழமையான, மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப்பொதுமறையான திருக்குறளை, குழந்தைகள் மற்றும் இளம் நுகர்வோரிடம் எளிமையாகவும், மகிழ்ச்சியான முறையிலும் கொண்டு சேர்ப்பதே இந்த சுவாரஸ்யமான முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இன்றைய இணைய தலைமுறையினர் திருக்குறளைப் படிக்கவோ அல்லது மனப்பாடம் செய்யவோ கட்டாயப்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனை மாற்றி, அன்றாடம் அவர்கள் ரசித்து ருசித்துச் சாப்பிடும் பிஸ்கட்டுகளின் வாயிலாகவே தமிழரின் மரபையும் பெருமையையும் அர்த்தமுள்ள வழியில் அறிமுகப்படுத்த பிரிட்டானியா முயன்றுள்ளது. இந்த எளிய யோசனையின் பின்னணியில், பண்பாட்டை முன்னிறுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு ஒரு பெரிய குழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது.
பிஸ்கட்டுகளில் தமிழ் எழுத்துக்களைத் துல்லியமாகப் பொறிப்பதற்காக வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்திப் பிரிவினர் அடங்கிய குழுவினர் இணைந்து சுமார் இரண்டு மாதங்கள் கடினமாகப் பணியாற்றியுள்ளனர். தமிழில் ஒரு சிறிய புள்ளி தவறினாலும் சொல்லின் பொருளே மாறிவிடும் என்பதால், ஒவ்வொரு தமிழ் எழுத்தின் நுணுக்கங்களையும் மிகக் கவனமாகக் கையாண்டு, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே இதற்கான பிரத்யேக அச்சுகளை உருவாக்கியுள்ளனர்.
மேலும், பிஸ்கட்டுகள் அடுமனையில் சுடப்பட்டு வெளிவந்த பிறகும், அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் தெளிவாகவும், எளிதாக வாசிக்கக்கூடிய வகையிலும் இருப்பதை தயாரிப்புக் குழுவினர் உறுதி செய்துள்ளனர். சாதாரணமாகத் தோன்றும் ஒரு பிஸ்கட்டை, தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பான திருக்குறளோடு குழந்தைகளைப் பிணைக்கும் ஒரு பாலமாக மாற்றியிருக்கும் பிரிட்டானியா மில்க் பிகிஸின் இந்த புதிய முயற்சிக்குத் தமிழகத்தில் பரவலான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
