ஒரு மாசத்துக்கு இத்தனை லட்சமா…?! இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம்… லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் நடிகை… வாயடைத்துப்போன ரசிகர்கள்…!!

By Swetha on ஆடி 10, 2026

Spread the love

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் ஸ்ரீலீலா, 2019-ல் ‘கிஸ்’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அமெரிக்காவில் பிறந்து, தனது மருத்துவரான தாயாரால் வளர்க்கப்பட்ட இவர், சமீபத்தில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ளார். ‘பகவந்த் கேசரி’, ‘குண்டூர் காரம்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வாவுடன் ‘பராசக்தி’ படத்திலும், அடுத்து தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்கள் மூலம் வருவாய் ஈட்டுவதில் நடிகைகளும் முதன்மையாக உள்ள நிலையில், ஸ்ரீலீலாவும் இதில் பெரும் தொகையை சம்பாதித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 1.66 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இவருடைய பக்கத்தில் உள்ள பதிவுகள் பெரும்பாலும் பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் சார்ந்த போட்டோஷூட்களாகவே இருக்கின்றன.

   

இன்ஸ்டாகிராமில் ஒரு குறிப்பிட்ட பிராண்டை விளம்பரப்படுத்துவதற்கு ஸ்ரீலீலா சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கட்டணமாகப் பெறுகிறார். இதன் மூலம், மாதத்திற்கு குறைந்த அளவிலான விளம்பரங்கள் கிடைத்தாலும், சமூக வலைதளங்கள் வழியாக மட்டுமே அவர் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது.