“அவங்கள நம்பி எங்கள விட்றாதீங்க அண்ணா”…. தவெக நிர்வாகிகள் குமுறல்… அதிமுக-விலிருந்து வந்தவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்…!

By Nanthini on ஆடி 10, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மைக்காலமாக ‘அதிமுக அணி’, ‘அசல் தவெக அணி’ என இருவேறு பிரிவுகளாக நிர்வாகிகள் செயல்பட்டு வருவது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள சூழலில், அதிருப்தியில் உள்ள தவெக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான N.ஆனந்த் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர், “கட்சியின் ஆரம்பக்காலம் தொட்டு, காலம் காலமாக உழைத்த எங்களைப் போன்றவர்களைக் கைவிட்டு விடாதீர்கள் அண்ணா” எனத் தங்களது குமுறல்களையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர். இவர்களின் கவலைகளைக் கேட்டறிந்த N.ஆனந்த், அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்தவர்களுக்கு உடனடியாக முக்கியப் பதவிகள் கொடுக்கும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை என்று கூறி, அதிருப்தி நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தி உறுதியளித்துள்ளார்.