மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்… முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு…! தமிழகமே பாராட்டும் ‘மாஸ்’ ஆக்ஷன்…!

By Swetha on ஆடி 9, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு இனிமேல் பெயரளவுக்கு மட்டும்படாமல், முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு அவர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர், இந்த உத்தரவை அனைத்துத் துறை அதிகாரிகளும் எவ்வித தொய்வுமின்றி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, அவர்களுக்குத் தேவையான நவீன உபகரணங்களை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் தீர்வு கண்டு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

   

மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டு முதலமைச்சர் பிறப்பித்துள்ள இந்த அதிரடி மற்றும் கனிவான உத்தரவானது சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசின் இந்த துரித நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.