மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,626 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் தகுதிப் பட்டியலின அடிப்படையில் மட்டுமே நடைபெறும் இந்தத் தேர்வுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஆன்லைன் தளம் வழியாக உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஒரு ஆண்டு காலப் பயிற்சியாக வழங்கப்படும் இந்தப் பணிகளுக்கு, அப்ரண்டிஸ் சட்ட விதிகளின்படி மாதந்தோறும் முறையான உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு , ஐடிஐ, டிப்ளமோ , பிஎஸ்சி, பிஏ அல்லது பிகாம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, 30.06.2026 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 24 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இருப்பினும், மத்திய அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு உரிய வயது வரம்புத் தளர்வுகள் அளிக்கப்படும்.
இவ்வேலைவாய்ப்பிற்கு எந்தவித எழுத்துத் தேர்வும் இன்றி, விண்ணப்பதாரர்களின் கல்வி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தகுதியுள்ள ஆர்வலர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று கூடுதல் விவரங்களை அறிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.07.2026 மாலை 05.00 மணி என்பதால், கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க உடனே விண்ணப்பிப்பது நல்லது.
