“TVK MLA-க்கள் டீலிங்”…. ஜூன் 26 இரவு 10 மணிக்கு அடித்த போன் கால்… கோர்ட்டில் சுக்குநூறான போலீஸ் பிளான்… கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்….!

By Nanthini on ஆடி 9, 2026

Spread the love

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடத்தியதாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ய முயன்ற தமிழக அரசுக்கு தற்போது ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜி முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (FIR) தான் இந்த வழக்கின் முக்கியத் திருப்புமுனையாக மாறியுள்ளதாகச் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏனெனில், அந்த FIR-ல் ஜூன் 26-ம் தேதி இரவு 10 மணியளவில் குதிரை பேரம் தொடர்பான தொலைபேசி அழைப்பு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், அந்தச் சம்பவம் நடந்து 3 நாள்களுக்குப் பிறகே காவல்துறை முறைப்படி வழக்குப் பதிவு செய்துள்ளது. புகாருக்கும் வழக்குப்பதிவிற்கும் இடையே உள்ள இந்த நீண்ட காலத் தாமதம், காவல்துறையின் அவசர நடவடிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், சட்டரீதியாக செந்தில்பாலாஜிக்கு சாதகமாக அமைந்து அவருக்குக் கூடுதல் வலுவைச் சேர்த்துள்ளது.