“இப்படியும் ஒரு சடங்கா..? முதலிரவு அறைக்குள் நுழையும் மாமியார்… விருந்தினருக்கு மனைவியைப் பகிர்ந்தளிக்கும் கணவர்கள்… நெட்டிசென்கள் ஷாக்…!!”

By Swetha on ஆடி 8, 2026

Spread the love

ஆப்பிரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பழங்குடி கிராமத்தில், திருமணம் முடிந்தபின் முதலிரவு அறைக்குள் மணமக்களுடன் மணமகளின் தாயாரும் உள்ளே செல்லும் சடங்கு உள்ளது. புதிதாக வாழ்க்கையைத் தொடங்கும் மகளுக்குத் தேவையான தாம்பத்திய பாடங்களை நேரில் சொல்லிக்கொடுத்து, தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குவதை உறுதி செய்யவே தாய் உடன் செல்கிறார். இதேபோல், நமீபியாவில் வாழும் “ஹிம்பா” பழங்குடியின மக்களிடம் “ஒகுஜெபிசா ஒமுகாசெண்டு” என்ற வழக்கம் உள்ளது. தங்கள் பகுதிக்கு வரும் விருந்தினர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கு, கணவன்மார்கள் தங்களது மனைவிகளைத் தற்காலிகமாகப் பகிர்ந்து உபசரிக்கும் நடைமுறையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள “புன்காக்” என்ற மலைப்பிரதேசத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு விசித்திர நடைமுறை நிலவுகிறது. இது பாரம்பரிய சடங்கு என்பதை விட, சுற்றுலாத் தொழிலுடன் தொடர்புடைய ஒரு “ஒப்பந்த திருமணம்” ஆகும். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளான ஆண்களை, உள்ளூர் பெண்கள் தற்காலிகமாகத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துகிறார்கள். அந்த ஆண் அந்த இடத்தை விட்டு கிளம்பும்போது, பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பணமாகக் கொடுத்துவிட்டுச் செல்வதுடன் அந்தத் திருமணமும் முடிவுக்கு வந்துவிடுகிறது. பின்னர் மற்றொரு நபருடன் இதே போன்ற ஒப்பந்தம், தாம்பத்தியம் மற்றும் பிரிவு தொடர்கிறது.

   

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் வாழும் “முரியா” பழங்குடியின மக்களிடையே “கோத்துல்” என்ற விசித்திரமான சமூக வழக்கம் உள்ளது. பருவ வயதை எட்டும் சிறுவர் மற்றும் சிறுமிகள் ஒன்றாகத் தங்குவதற்கென கிராமத்தின் நடுவே ‘கோத்துல்’ என்ற தனி மண் குடில்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு இளைஞர்கள் தங்களுக்குள் பழகவும், பாலியல் ரீதியான புரிதல்களை ஏற்படுத்திக் கொள்ளவும், தங்களுக்குப் பிடித்த துணையைத் தேர்ந்தெடுக்கவும் முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது. எனினும், காதலில் விழுந்து பொறாமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சில இடங்களில் ஒரே நபருடன் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது என்ற கட்டுப்பாடும், துணையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. காலப்போக்கில் இத்தகைய சடங்குகளில் பல மாற்றங்கள் வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.