“அப்பா சொன்ன அந்த ஒரு வார்த்தை… விஜய் கைவிட்ட பிளாக்பஸ்டர் மூவி…! 24 ஆண்டுக்குப் பின் இரகசியத்தை போட்டுடைத்த இயக்குநர்…!!”

By Swetha on ஆடி 8, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாக வலம் வந்து, தற்போது தமிழக முதல்வராக இருக்கும் விஜய் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இயக்குநர் லிங்குசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில், கடந்த 24 வருடங்களாக வெளியில் சொல்லாத ஒரு ரகசியத்தை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ரன்’. இந்தத் திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனிடம் லிங்குசாமி கூறியபோது, இதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். இதனால், லிங்குசாமி இக்கதையை விஜய்யின் தந்தையிடம் கொண்டு சென்றுள்ளார்.

   

ஆனால், அந்தச் சமயத்தில் விஜய் ‘தமிழன்’ திரைப்படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். மேலும், ‘பெண்கள் பின்னாடி சுற்றும் கதை விஜய் சாருக்கு செட் ஆகாது, வேண்டாம்’ என்று அவருடைய தந்தை மறுத்துவிட்டதால், விஜய்யால் ‘ரன்’ படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. இதன் பின்னர், லிங்குசாமி விஜய்யை வைத்து ‘சண்டக்கோழி’, ‘வேட்டை’ உள்ளிட்ட படங்களை இயக்க முயற்சித்தும், அந்த முயற்சிகளும் நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.