“சுடுகாட்டுக்கு போனாலும் போவேனே தவிர…!” – அதிமுகவை அதிரவைத்த MLA-வின் பரபரப்பு வாக்குமூலம்…!

By Swetha on ஆடி 7, 2026

Spread the love

“சுடுகாட்டுக்குச் சென்றாலும் செல்வேனே தவிர, மாற்றுக்கட்சிக்கு செல்ல மாட்டேன்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சியின் முக்கியக் கூட்டத்தை சுகுமார் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாயின. இதனால், அவர் திமுக அல்லது வேறு மாற்றுக்கட்சிக்கு மாறக்கூடும் என்ற அரசியல் வதந்திகளும், பேச்சுகளும் தீவிரமாக எழுந்தன.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக தான் எப்போதும் தன் கட்சி என்றும், எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்றும், இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரிடம் உரிய அனுமதி பெற்றே, மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அரசு கூட்டத்தில் தான் பங்கேற்றதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.