திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு கைது நடவடிக்கைகள் பாயும் நிலையில், தற்போதைய ஆளுங்கட்சி அமைச்சர்களின் பின்னணி குறித்து உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கருப்புச் சந்தையில் (பிளாக் மார்க்கெட்) லாட்டரி சீட்டுகளை விற்றவர்களெல்லாம் இன்று அமைச்சர்களாக உயர்ந்திருப்பதாகச் சாடிய அவர், இப்போதைய அமைச்சர்களின் சுயவிவரப் பட்டியலை (பயோ டேட்டா) எடுத்துப் பார்த்தால் அடிதடி, நில அபகரிப்பு, வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தது மற்றும் திருட்டு விசிடி விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் புகார்களும் வரிசைகட்டி நிற்பதாகக் குற்றம் சாட்டினார்.
இத்தகைய தீவிரமான குற்றப்பின்னணி கொண்ட அமைச்சர்கள் மீது எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் சுதந்திரமாக நடமாடவிட்டு, அதற்கு மாறாக திமுகவின் முன்னாள் அமைச்சர்களை திட்டமிட்டே பொய் புகார்களின் கீழ் தற்போதைய அரசு கைது செய்து பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருவதாக அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
