பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உரிமையாளரின் இந்த சந்தேகத்திற்கிடமான செயலை ஊழியர்களான நான்கு இளம் பெண்கள் கையாளுமாகப் பிடித்துள்ளனர்.

தங்கள் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதை உணர்ந்த அந்தப் பெண்கள், கடும் ஆத்திரமடைந்து அந்த உரிமையாளரை நடுரோட்டிற்கு இழுத்து வந்தனர். அவரைச் சூழ்ந்து கொண்டு, தங்களின் காலணிகளால் சரமாரியாக அடித்துத் தர்மஅடி கொடுத்தனர். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

   

https://www.instagram.com/reel/DaU_x2lCnZ5/?utm_source=ig_web_button_share_sheet

   

பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தத் துரோகம் மற்றும் அத்துமீறல் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பார்லர் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர். மேலும், குடிநீரில் என்ன மாதிரியான பொருள் கலக்கப்பட்டது என்பது குறித்தும், இதற்குப் பின்னால் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.