26 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய்-கருணாநிதி செய்த மிரட்டல் சம்பவம்… “டைடல் பார்க்” பெயருக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்… தயநிதி மாறன் வெளியிட்ட அந்த வீடியோ…!

By SATHISH R on ஆடி 4, 2026

Spread the love

தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள ‘டைடல் பார்க்’ வளாகத்தையே சாரும். கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் தொலைநோக்கு முயற்சியால் உருவான இந்த மென்பொருள் பூங்காவை, அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திறந்து வைத்தார். தமிழக அரசு நிறுவனங்களான டிட்கோ மற்றும் எல்காட் ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கியதால், இதற்கு எனப் பெயரிடப்பட்டது. 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் ஐடி புரட்சிக்கு வித்திட்ட இந்த நிகழ்வை சமூக வலைத்தளங்களில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் வெகுவாகக் கொண்டாடி வருகின்றனர்.

   

ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் ஒன்றான இக்கட்டடம், சுமார் 1.28 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 12 மாடிகளுடன், இந்தியாவின் முதல் ‘நுண்ணறிவு கட்டடங்களில்’ ஒன்றாகக் கட்டப்பட்டது. தடையில்லா மின்சாரம், அதிவேக இணைய சேவை மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் தொடங்கப்பட்ட இ வளாகம், ஆரம்பத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்தொழில்நுட்பப் பூங்காவின் வருகைக்கு முன்புவரை, தமிழகத்தைச் சேர்ந்த ஐடி பட்டதாரிகள் வேலைவாய்ப்புகளுக்காகப் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், டைடல் பார்க் திறக்கப்பட்ட பிறகு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குச் சென்னையிலேயே உலகத்தரம் வாய்ந்த வேலைவாய்ப்புகள் அமையத் தொடங்கின.

   

டைடல் பார்க்கின் அசுர வெற்றிதான், இன்று சென்னையின் ஓஎம்ஆர் சாலையை இந்தியாவின் பிரம்மாண்ட ‘ஐடி காரிடார்’ ஆக மாற்றியமைக்க முதன்மை விதையாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, கோவையிலும் மிகப்பெரிய டைடல் பார்க் வளாகம் உருவாக்கப்பட்டதுடன், தற்போது விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களிலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் ‘மினி டைடல் பார்க்’ திட்டங்கள் அதிவேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையை உலகளாவிய மென்பொருள் தலைநகரமாக தரம் உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்ததில் டைடல் பார்க் என்றும் ஒரு மைல்கல்லாகும்.