“கூட்டணிக்கு குட்பை…? “திமுக தனித்துப் போட்டி…?! ஸ்டாலினின் அதிரடி முடிவு… தமிழக அரசியலில் உடையும் மாபெரும் கூட்டணி…!!”

By Swetha on ஆடி 3, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல் தனித்துப் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, “தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் திமுக தனித்துப் போட்டியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது; இனிமேல் கூட்டணி தேவையில்லை என்று தலைவர் அறிவிக்க வேண்டும்” என வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி வழியில் தாமும் கூட்டணியை இறுதிவரை பாதுகாக்கவே விரும்புவதாகவும், ஆனால் தற்போது கட்சியினரே கூட்டணி தேவையில்லை என்ற கருத்தை முன்வைப்பதால், அந்தக் கருத்தையும் விரைவில் பரிசீலிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். கூட்டணி தேவையில்லை என்ற கட்சியினரின் விருப்பம் “பரிசீலிக்கப்படும்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

   

மாறிவரும் அரசியல் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாகப் பல்வேறு கட்சிகள் மாறியுள்ள நிலையில், திமுக தனது தனிப்பட்ட வாக்கு வங்கியின் பலத்தை சோதித்துப் பார்க்க இதுவே சரியான தருணம் என்று கட்சியின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடுமா அல்லது புதிய கூட்டணிகளை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதில் எடுக்கப்படும் முடிவு 2031 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் அரசியல் பாதையைத் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக அமையலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.