BREAKING: தவெக வேண்டாம்…. CM விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.வேலுமணி…. கொங்கு மண்டல அரசியலை தலைகீழாக மாற்றும் அந்த ஒரு முடிவு…!

By Nanthini on ஆடி 3, 2026

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் அசுர பலமிக்க அரசியல் முகமுமான எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மீதான தனது அதிருப்தி காரணமாக கட்சி மாற முடிவெடுத்திருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. தொடக்கத்தில், அவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது அண்ணாமலையின் தலைமை அல்லது பாஜகவில் நேரடியாக இணைவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த திடீர் திருப்பம் தவெக தலைவர் விஜய்க்கே அதிர்ச்சியை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் நாளுக்கு நாள் அஸ்திவாரத்தை பலப்படுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தால், தனது அரசியல் எதிர்காலத்திற்கு அது பெரும் சாதகமாக அமையும் என்ற கணக்கிலேயே வேலுமணி இந்த முடிவை நோக்கி நகர்வதாகவும், இது நிஜமாகும் பட்சத்தில் கொங்கு பகுதி மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் ஒரு பெரிய அதிரடி மாற்றம் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.