பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக செயலியை அறிமுகம் செய்ய உள்ளார். பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்செயலி, மக்களின் குரலை மக்களாட்சி நிர்வாகத்துடன் நேரடியாக இணைக்கும் ஒரு பாலமாக இருக்கும் எனத் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரம்பூர் தொகுதியில் முன்னோடித் திட்டமாக அறிமுகமாகும் இந்தச் செயலி, அங்கு கிடைக்கும் வரவேற்பையும் செயல்பாட்டையும் பொறுத்து, எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே பலத்த கேள்வியாக எழுந்துள்ளது.
