“செருப்பால் அடிப்பேன்”… நான் செத்தாலும் அவன் ஜெயிலுக்கு போவான்… நாஞ்சில் விஜயனை வெளுத்து வாங்கிய விஜே வைஷ்ணவி… வைரலாகும் ஷாக் வீடியோ!

By Visaka on ஆடி 2, 2026

Spread the love

பிரபல காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கையான விஜே வைஷ்ணவிக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கடுமையான பண மற்றும் தனிப்பட்ட ரீதியிலான பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. நாஞ்சில் விஜயன் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, தனது பணத்தையும் ஏமாற்றிவிட்டதாக வைஷ்ணவி தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இவர்களின் இந்த மோதல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

https://www.instagram.com/p/DaKjdYlJ7FW/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

   

இந்நிலையில், விஜே வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் செருப்பை வைத்தபடி மிகவும் ஆக்ரோஷமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நாஞ்சில் விஜயனின் ஆதரவாளர்கள் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிக மோசமாக கமெண்ட் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு நாஞ்சில் விஜயன் தான் பொறுப்பேற்று சிறைக்குச் செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ளார். மேலும், “எங்களுக்குள் நடப்பது எங்களுக்குத்தான் தெரியும், இனிமேல் என்னைப்பற்றி அவதூறாகப் பேசுபவர்களை செருப்பால் அடிப்பேன்” என்று மிகுந்த கோபத்துடன் வைஷ்ணவி பேசியுள்ளது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.