விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

By Swetha on ஆடி 1, 2026

Spread the love

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும், ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி உடனடியாக தவெகவுக்கு ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே ராகுல் காந்தியும் விஜயும் கூட்டணி அமைக்க விரும்பியிருந்தாலும், சோனியா காந்தியின் முடிவால் அது சாத்தியப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெக ஆட்சியில் இணைந்து இரண்டு அமைச்சர் பதவிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவிடமிருந்து கணிசமான இடங்களைப் பெறத் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பலமடைவதைத் தடுக்க வேண்டும் என பாஜக தலைமை பலமுறை அறிவுறுத்தியும், தவெக தலைவர் விஜய் அதனைப் பொருட்படுத்தாமல் காங்கிரஸை ஆதரிப்பது டெல்லி வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் இந்த அரசியல் நகர்வால் கோபமடைந்துள்ள பாஜக தலைமை, புதிய அரசைக் கட்டுக்குள் கொண்டு வரவும், தவெகவை வழிக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, தவெக அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விரைவில் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் இலக்கு வைக்க டெல்லி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

   

இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிரான பழைய ஊழல் புகார்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை மீண்டும் கையில் எடுக்குமாறு அமலாக்கத்துறைக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசிந்துள்ளன. இந்த மத்திய புலனாய்வு அமைப்புகளின் திடீர் நடவடிக்கைகள் மூலம் தவெக அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்து, காங்கிரஸுடனான அவர்களின் நெருக்கத்தைக் குறைப்பதே பாஜகவின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.