TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

By Swetha on ஆடி 1, 2026

Spread the love

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சுமார் 35 கோடி ரூபாய் வரையும், மற்ற உறுப்பினர்களிடம் 50 கோடி ரூபாய் வரையும் பேரம் பேசி, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் திமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக தவெக தரப்பு சாடியுள்ளது.

இந்தக் குதிரை பேரக் குற்றச்சாட்டின் அடிப்படையில் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய மூன்று பேரை காவல்துறை கையும் களவுமாகக் கைது செய்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்துள்ளது. இதில் கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் என்பவர் செந்தில் பாலாஜியுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர் என்றும், கரூர் நிறுவன ஊழியர்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் ‘கரூர் கேங்’ இதில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அவர் விரைவில் கைதாகலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

   

திமுகவும் அதிமுகவும் பாஜகவுடன் இணைந்து அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகவும், மக்களின் நம்பிக்கையை இழந்த ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்றும் தவெக விமர்சித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படாத நிலையில், வரும் ஜூலை 10, 11 தேதிகளில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்லவிருக்கிறார். அதற்கு முன்பாகவே செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.