புருஷன் இல்லன்னா என்னமா நான் இருக்கேன் வா… மகன் இறந்த 3 மாதத்தில்… மருமகளிடம் மாமனார் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த அந்த சம்பவம்…!

By SATHISH R on ஆடி 1, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், நள்ளிரவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அனகாபுத்தூரைச் சேர்ந்த மீனா (28) என்ற பெண்ணின் கணவர் மணிகண்டன், உடல்நலக் குறைவால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் காலமானார். கணவரை இழந்த துக்கத்தில் இருந்த மீனா, தனது 8 வயது மகளுடன் மாமனார் பெருமாள் (58) மற்றும் மாமியார் பத்மா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கணவர் இல்லாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மாமனார் பெருமாள், மருமகள் மீனாவுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மீனா, மாமனாரைக் கண்டித்ததோடு இதுகுறித்து தனது மாமியார் பத்மாவீடமும் முறையிட்டுள்ளார். இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட பத்மா, கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மாமியார் இல்லாததால் பயந்துபோன மீனா, தனக்குத் துணையாக உறவினர் வீட்டுச் சிறுமி ஒருவரைத் தனது அறையில் தங்க வைத்துள்ளார்.

   

கடந்த நள்ளிரவில், மீனா தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை பெருமாள் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் தட்டியதால் வேறு வழியின்றி மீனா கதவைத் திறந்துள்ளார். அப்போது, அவரிடம் தவறாகப் பேசிய பெருமாள், அத்துமீறி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மாமனாரின் இந்த வெறித்தனமான செயலைத் தடுக்க முடியாத சூழலில், தற்காப்பிற்காக அங்கிருந்த அரிவாள்மனையை எடுத்து பெருமாளின் கழுத்தில் மீனா வெட்டியுள்ளார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்ததும், மீனா அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

   

நள்ளிரவில் வீட்டில் இருந்து கேட்ட அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, பெருமாள் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்காப்பிற்காக இந்த விபரீத முடிவை எடுத்த மீனாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.