இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் கூட மொபைல் போன்களை இயக்குவதில் வல்லுனர்களாக மாறிவிட்டனர். அவ்வாறு விளையாட்டாக ஒரு சிறுவன் செய்த காரியம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தன் தாயின் மொபைலைப் பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் ஆன்லைனில் ஒரு பெரிய டிவியை ஆர்டர் செய்துள்ளான். வீட்டிற்கு டெலிவரி ஏஜென்ட் அந்த டிவியைக் கொண்டு வந்தபோதுதான் தாய்க்கு இந்த விஷயமே தெரியவந்துள்ளது. தன் தாய் எப்போதும் டிவியில் சீரியல் பார்ப்பதால், தனக்கு கார்ட்டூன் பார்க்க தனி டிவி வேண்டும் என்ற காரணத்திற்காகவே அந்த சிறுவன் இந்த ஆர்டரைச் செய்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த தாய், டெலிவரி செய்பவர் முன்னிலையிலேயே குழந்தையைத் திட்டித் தீர்க்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
https://twitter.com/Ayesha786Majid/status/2071583907519283468/photo/1
இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து சமூக வலைத்தளவாசிகள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது முழுக்க முழுக்க முன்பே திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட ஒரு ‘ஸ்கிரிப்டட்’ (Scripted) வீடியோ என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில், வீட்டில் எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவத்தை எப்படி ஒருவரால் முன்பே கேமராவில் பதிவு செய்ய முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், வீடியோவில் 65 இன்ச் டிவி என்று கூறப்பட்டாலும், அந்த டிவியின் பாக்ஸ் மீது 43 இன்ச் என்றே எழுதப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் இது போன்ற வீடியோக்கள் வெறும் விளம்பரத்திற்காகவும், லைக்குகளைப் பெறுவதற்காகவும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
