நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

By SATHISH R on ஆடி 1, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது மாணவன் ஒருவன் தனது ஆசிரியரை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘லிட்டில் பிளவர்’ பள்ளியில் பணிபுரியும் விஷால் துசிங் என்ற ஆசிரியர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். வகுப்பறையில் நடந்த இந்த கொடூர வன்முறைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

காவல்துறை விசாரணையின்படி, சம்பந்தப்பட்ட மாணவன் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த தேர்வுகளில் தோல்வியடைந்ததால் பள்ளியை விட்டு நின்றுள்ளார். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த அவர், தனது மாற்றுச் சான்றிதழைக் கேட்டுள்ளார். அப்போது பள்ளி முதல்வர், அதற்கான உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து கட்டணத்தைச் செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மாணவன், தான் தேர்வில் தோல்வி அடைந்ததற்கும் பள்ளியை விட்டு வெளியேறியதற்கும் தனது வகுப்பு ஆசிரியர்தான் காரணம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

   

முதல்வரின் அறையில் தொடங்கிய இந்த வாய்த்தகராறு, ஒருகட்டத்தில் எல்லை மீறி வன்முறையாக மாறியது. ஆசிரியர் விஷால் துசிங் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, அந்த மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி முதல்வரும் மற்ற ஊழியர்களும் தடுக்க முயன்றபோது, அவர்களையும் அந்த மாணவன் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது.

 

தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியர் விஷால் துசிங் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில், சவானி காவல் நிலைய ஆய்வாளர் விவேக் ஜாதவ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த 17 வயது மாணவனைக் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.