அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய தலைவர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இணைப்பு விழாவில், இவர்கள் இருவர் மட்டுமன்றி அதிமுகவின் பல்வேறு முக்கிய முகங்களும் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த இரு விஜயபாஸ்கர்களும் தங்களது பலத்த அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளவர்கள் என்பதால், இவர்களின் இந்த அதிரடி முடிவு தவெகவிற்கு அந்தப் பகுதிகளில் கூடுதல் பலம் சேர்க்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
