மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கூனோ தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சஃபாரி பாதையில் திடீரென ஒரு சிறுத்தை வந்து படுத்துக்கொண்டது. சஃபாரி வாகனங்கள் தனக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்த போதிலும், அதைப் பற்றி எந்தப் பயமும் இல்லாமல் அந்தச் சிறுத்தை சாலையின் நடுவிலேயே மிகவும் நிதானமாகப் படுத்துக் கொண்டு, உடலை நீட்டி நெளித்து ஓய்வெடுத்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தச் சிறுத்தை சாலையை விட்டு நகரமால் அங்கேயே புரண்டு படுத்துக் கொண்டிருந்ததால், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மேலே செல்ல முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டன. பொதுவாக மனிதர்களைக் கண்டால் ஓடி மறையும் சிறுத்தையின் இந்த கம்பீரமான மற்றும் அமைதியான “ராயல்” தோரணை அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.
https://twitter.com/i/status/2071842897939587178
இந்த அரிய காட்சியைச் சஃபாரி வாகனங்களில் இருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது கேமராக்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். காட்டின் அழகை இவ்வளவு அருகில் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். தற்போது இந்த சுவாரசியமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
