திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிதம்பரம் என்ற நடேசன் (63) என்ற முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். புலன் விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு எதிராக நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை வலுவாக பரிசீலித்த நீதிபதி, முதியவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு சாகும் வரை சிறையிலேயே கழிக்க வேண்டிய ஆயுள் தண்டனையுடன் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
