“எல்லாரும் உன்ன அன்னைக்கு அப்படி சொன்னாங்க” நெதர்லாந்தை வீழ்த்தி மாஸ் காட்டிய மகன்.. மைதானத்திலேயே கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட தாய்: ஃபிஃபா உலகக்கோப்பையில் அரங்கேறிய எமோஷனல் வைரல் வீடியோ..!!

By Swetha on ஆடி 1, 2026

Spread the love

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட்டில், மொராக்கோ அணியின் மிட்ஃபீல்டர் இஸ்மாயில் சைபாரி மிக முக்கியமான இறுதி கோலை அடித்து தன் அணியை ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றுக்கு தகுதி பெறச் செய்தார். இந்த வரலாற்று வெற்றி மொராக்கோ ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வெற்றி முழக்கம் முழங்கிய சில நிமிடங்களிலேயே, 25 வயதான இஸ்மாயில் சைபாரி மைதானத்தில் இருந்து நேராகத் தன் குடும்பத்தினர் அமர்ந்திருந்த கேலரி பகுதிக்கு ஓடினார். அங்கு உணர்ச்சிப் பெருக்கால் அழுதுகொண்டிருந்த தன் தாயைக் கட்டியணைத்து முத்தமிட்டு வெற்றியைப் பகிர்ந்துகொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது.

   

தாய் மற்றும் மகனின் இந்த பாசப் பிணைப்பு குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விளையாட்டு வீரர்களின் சாதனைகளுக்குப் பின்னால் இருக்கும் குடும்பத்தினரின் தியாகத்தையும், ஆதரவையும் இந்த அழகான தருணம் உணர்த்துவதாகக் கூறி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இதனைப் பாராட்டி வருகின்றனர்.