அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை தான் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கட்சியை அடிமட்டத்திலிருந்து வளர்த்தெடுத்த சி.வி. சண்முகம், பி. தங்கமணி, கே.சி. வீரமணி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தன்னை முழுமையாக நம்பி வந்துள்ளதாகவும், உழைத்த அவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படாத நிலையில், தன்னை நம்பியவர்களைக் கைவிட்டுவிட்டு நான் மட்டும் சுயநலமாகப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை விட, தன்னோடு நின்ற நிர்வாகிகளின் அங்கீகாரமே முக்கியம் என்ற அவரது இந்த அதிரடி முடிவு, அதிமுக உட்கட்சி வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
