போடு ரகிட ரகிட… இனி whatsappல் நம்பர் இல்லாமலேயே CHAT பண்ணலாம்… வந்தாச்சு புதிய அப்டேட்…!

By Visaka on ஆனி 30, 2026

Spread the love

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப் செயலி, பயனர்களின் தனியுரிமையை மேலும் பாதுகாக்கும் வகையில் புதிய ‘யூசர்நேம்’ எனும் அட்டகாசமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக, வாட்ஸ்அப்பில் ஏதேனும் ஒரு குரூப் அல்லது கம்யூனிட்டி குரூப்பில் நாம் இணையும் போது, அதில் இருக்கும் முன்பின் தெரியாத நபர்களுக்குக் கூட நம்முடைய மொபைல் எண் தெரிந்துவிடும் சூழல் இருந்தது. இதற்குப் பயனர்கள் தரப்பில் தொடர்ந்து ஆட்சேபனைகளும் கவலைகளும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வந்துள்ள இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களுக்கு என ஒரு பிரத்யேக பயனர் பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம், நீங்கள் குரூப்களில் இருக்கும்போது மற்றவர்களுக்கு உங்கள் மொபைல் எண் காட்டப்படாது; மாறாக, உங்கள் யூசர்நேம் மட்டுமே திரையில் தோன்றும்.

இந்த புதிய வசதியின் மூலம், நீங்கள் புதிதாக யாருக்காவது மெசேஜ் செய்ய விரும்பினால் கூட உங்கள் மொபைல் எண்ணைப் பகிர வேண்டிய அவசியமில்லை, உங்களுடைய யூசர்நேம்களை வைத்தே தொடர்பு கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தனியுரிமை அம்சத்தை உங்கள் கணக்கில் செயல்படுத்த, வாட்ஸ்அப் செயலியின் செட்டிங்ஸ் (Settings) பகுதிக்குச் சென்று, அக்கவுண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்து, அதில் உள்ள ‘யூசர்நேம்’ (Username) என்ற பிரிவில் உங்களுக்குப் பிடித்தமான தனித்துவமான பெயரை அமைத்துக் கொள்ளலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் தேவையற்ற அழைப்புகளில் இருந்து தப்பிக்க இந்த அம்சம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.