தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்… இரவில் வந்த HAPPY NEWS…. அமைச்சர் பார்த்திபனின் அதிரடி மாஸ் அறிவிப்பு….!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து வகையான பேருந்துகளிலும் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் விரைவிலேயே விரிவுபடுத்தி அறிவிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மக்களின் நலன் கருதி படிப்படியாக முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும், இந்த இலவசத் திட்டங்களால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடுகட்டும் வகையிலும், போக்குவரத்துத் துறையின் ஒட்டுமொத்த வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு ஆலோசனைகளிலும், புதிய உத்திகளை வகுப்பதிலும் அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.