திடீர் திருப்பம்… விராலிமலையில் வீடு வீடாகச் சென்ற கடிதம்… அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்….. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான்… அதிரும் அரசியல் களம்….!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

விராலிமலை இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தீவிரமாக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவுகள் ஏதும் வெளியாகாத நிலையில், தொகுதி மக்களை கவரும் வகையில் அவரது தரப்பில் இருந்து விராலிமலை முழுவதும் பரிசுப் பொருட்களுடன், “வாக்காளர்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்” என்ற வாக்குறுதி அடங்கிய உறுதிமொழி கடிதமும் விநியோகிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை தவெகவில் இணைவதில் சிக்கல் நீடித்தால், தொகுதியில் தனக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கவும் அவர் தயாராகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர், இதனால் விராலிமலை இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.