அந்த 1000 கோடி எங்கே?…. “அட்ரஸ் ஒன்னா இருக்கு..!” உதயநிதி விவகாரத்தில் அண்ணாமலை போட்ட X பதிவு…. தமிழக அரசியலில் புதிய புயல்…!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

திமுக அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலை, அண்மையில் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் துபாய் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய உடனேயே, ‘நோபல் ஸ்டீல்ஸ்’ என்ற நிறுவனம் தமிழகத்தில் ₹1,000 கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியானது என்றும், ஆனால் அந்த முதலீடு இன்றுவரை வெற்று அறிவிப்பாகவே நீடிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற அமைப்பும், இந்த நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனமும் ஒரே முகவரியில்தான் இயங்கி வருகின்றன என்ற பகிரங்கக் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ள அண்ணாமலை, இந்த விவகாரத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அரசு தரப்பு உரிய முறையில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.