விஜய் போட்ட ஸ்கெட்ச்… ஸ்டாலினுக்கு செக் வைக்கிறாரா திருமா?… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது திருச்சி கிழக்கு தொகுதியை மையமாக வைத்தே பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இந்தத் தொகுதியைக் குறிவைத்து தனது அரசியல் காய்களை நகர்த்தி வரும் வேளையில், திமுக தரப்பிலும் இதுகுறித்த தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன.

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலினையே நேரடியாகப் போட்டியிட வைக்க வேண்டும் என்று திமுகவினர் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ஒருவேளை அவர் அங்கு களம் கண்டால், அவருக்கு எதிராக வலுவான வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை களம் இறக்கலாம் என மறுதரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருதரப்பிலும் இந்த வியூகம் தொடர்பாக ரகசிய ஆலோசனைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால், திருச்சி கிழக்கு தொகுதி இப்போதே அடுத்த சட்டமன்றத் தேர்தலின் மிக முக்கிய நட்சத்திரத் தொகுதியாக உருவெடுத்துள்ளது.