தலைமை மாறுகிறதா தமிழக காங்கிரஸ்..? ரேஸில் மாணிக்கம் தாகூர்… அதிர்ச்சியில் செல்லக்குமார், ஜோதிமணி..!!

By Soundarya on ஆனி 26, 2026

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தான் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்திருந்தால், காங்கிரஸிற்கு கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் பதவிகளும் கிடைத்திருக்கும் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களுக்குள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போதைய அரசியல் சூழலில், செல்வப்பெருந்தகையின் இந்த திடீர் முடிவு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

செல்வப்பெருந்தகை ஒருவேளை தனது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், புதிய மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டியில் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தீவிரமாக முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மிக நெருக்கமானவராகவும், நாடாளுமன்றத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவருமான மாணிக்கம் தாகூருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸின் இந்த தலைமை மாற்றம், வரும் தேர்தல்களில் கட்சியின் கூட்டணி வியூகங்களையும், எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.