BREAKING: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்வு.. நகைப்பிரியர்கள் ஷாக்..!!

By Soundarya on ஆனி 26, 2026

Spread the love

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலையின் காரணமாக, கடந்த சில நாட்களாகச் சரிந்து வந்த தங்கம் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,220-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ₹1,05,760-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாகச் சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, இன்று திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையேயும் நகை பிரியர்களிடையேயும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரக் காரணிகள் மற்றும் சந்தை மாற்றங்களே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.