ஆட்டம் ஆரம்பம்..! திமுக ஆட்சியில் ‘பார்ட்டி ஃபண்ட்’… அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் பரபரப்பு உத்தரவு…!!

By Soundarya on ஆனி 26, 2026

Spread the love

திமுக ஆட்சியில் முறைக்கேடாக வசூலிக்கப்பட்ட ‘பார்ட்டி ஃபண்ட்’ விபரங்களைச் சேகரிக்குமாறு அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் முதல்வர் விஜய் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக, குற்றம் சாட்டப்படும் விவகாரங்களை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா என்று உதயநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன் காரணமாக, இந்த முறைகேடு விவகாரத்தை வரவிருக்கும் சட்டமன்றப் பேரவையில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நெருங்கி வருவதால், இந்த நிதி வசூல் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.