“நடுரோட்டில் கள்ளக்காதலியுடன் கணவன்… தலைமுடியை பிடித்து இழுத்து வெளுத்து வாங்கிய மனைவி…!!”

By Swetha on ஆனி 26, 2026

Spread the love

ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில், கணவன் தனது தோழியுடன் பைக்கில் சுற்றித் திரிவதைக் கண்ட அவரது மனைவி, நடுரோட்டில் வைத்து இருவரையும் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான ‘ஹை வோல்டேஜ்’ டிராமா வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவம் ஜெய்ப்பூரின் டோங்க் ரோட்டில் உள்ள காந்திநகர் ரயில் நிலையம் அருகே நடந்துள்ளது. தனது கணவர் வேறொரு பெண்ணுடன் பைக்கில் செல்வதைக் கண்ட மனைவி, ஆத்திரமடைந்து அவர்களின் வாகனத்தை நடுவழியில் மறித்துள்ளார். பின்னர், கணவனின் முடியைப் பிடித்து இழுத்து முகத்தில் அறைந்ததோடு, அவருடன் வந்த பெண்ணையும் நடுரோட்டில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார். கணவனை ‘ஏமாற்றுக்காரன்’ என்று கத்திப் பொதுமக்களுக்கு மத்தியில் அவர் சண்டையிட்டதால், அங்கு பெருமளவில் கூட்டம் கூடி சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

   

போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், அந்த நபர் தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததும், அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகப்பட்டு கடந்த சில நாட்களாகக் கண்காணித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் அளிக்கப்படவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் பஜாஜ் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.