“இனி இவங்க தான் எல்லாமே”… அதிமுகவில் நள்ளிரவு அதிரடி… இபிஎஸ் போட்ட ஒற்றை உத்தரவு… அதிர்ந்து போன அரசியல் களம்….!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

அதிமுகவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தற்போது முக்கிய நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் தங்களின் செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன் மற்றும் முன்னாள் எம்பி திருத்தணி கோ. அரி உள்ளிட்டோர் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக பொன் தனபாலன் பொறுப்பேற்றுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியை வலுப்படுத்தவும் மூத்த நிர்வாகிகளைத் திருப்திப்படுத்தவும் இத்தகைய முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.