Party Fund கொடுத்து ஏமாந்தவர்கள் எங்களை அணுகினால் பணத்தை பெற்றுத் தருகிறோம் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மின் திட்டங்களுக்கு கட்சி நிதி எதுவும் கிடையாது என்றும், திமுக ஆட்சியில் கட்சி நிதி கொடுத்து ஏமாந்தவர்கள் எங்களை அணுகினால் அந்தப் பணத்தைப் பெற்றுத் தருகிறோம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த திமுக ஆட்சியில் மின் திட்டங்களுக்காக நிதி வசூலித்ததாகக் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக முன்வந்து தங்களை அணுகலாம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், நிர்வாக நலன் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, தங்கள் ஆட்சியில் இதுவரை சுமார் 3,000 பேருக்குப் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசு ஊழலற்ற, முறைகேடுகளற்ற நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதில் உறுதியாக உள்ளது என்பதைத் தன் பேச்சின் மூலம் வலியுறுத்தினார்.
