40,000 ஆபாச வீடியோக்கள்… இந்து பெண்களைக் குறிவைத்து ‘ஜிஹாத்’ சதி..? அதிர்ச்சியை ஏற்படுத்திய டெலிகிராம் குரூப் விவகாரம்..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், பஜ்ரங் தளம் அளித்த புகாரின் பேரில் மனிஷ் சர்மா என்ற வாலிபர், பெயரை மாற்றி டெலிகிராம், ஸ்னாப்சாட் மூலம் இந்து பெண்களைக் குறிவைத்து 40,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களைச் சேமித்து வைத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்ததாகவும், ‘கஸ்வா-ஏ-ஹிந்த்’, ‘ஜிஹாத்-அல்-அக்பர்’ போன்ற குழுக்கள் மூலம் உத்தரவுகள் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள கோட்டா காவல்துறை, மனிஷ் சர்மா மதமாற்றம் செய்ததற்கோ அல்லது இந்து கடவுள்களை அவமதித்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், ஆபாச வீடியோக்களை டெலிகிராமில் இருந்து பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்தது மட்டுமே உறுதியாகியுள்ளது. பாகிஸ்தான் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

   

தற்போது சிறையில் உள்ள மனிஷ் சர்மாவின் மொபைல் தரவுகள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பெண்களின் உடலில் மதச் சின்னங்கள் இருந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.