கடந்த திமுக ஆட்சியில் 58,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், அனைத்து டெண்டர்களிலும் 30 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அவர், இந்த ஊழல்கள் அனைத்தும் வெளியே தெரியாத அளவுக்கு மிகவும் திட்டமிட்டு விஞ்ஞான முறையில் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், கமிஷன் கொடுத்ததாக எந்தவொரு ஒப்பந்ததாரரும் இதுவரை தன்னிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு யாராவது தைரியமாக முன்வந்து புகார் அளித்தால், அடுத்த நிமிடமே காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
