மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 கிடைப்பதில் சிக்கல்?…. வெளியான அதிர்ச்சி தகவல்… காலையிலேயே இல்லத்தரசிகளுக்கு ஷாக்…!

By Nanthini on ஆனி 25, 2026

Spread the love

தமிழகத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் ‘தங்க மோதிரத் திட்டம்’ குறித்து விசிக தலைவர் திருமாவளவன் முன்வைத்துள்ள கருத்து தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இத்திட்டத்திற்காக அரசு செலவிடும் பெரும் தொகையை மறுபரிசீலனை செய்து, அதற்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்தலாம் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அரசு இந்த ஆலோசனையைப் பரிசீலித்தால், அது மற்றொரு முக்கிய திட்டமான ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் மீதான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தற்போதைய நிதிச் சூழலில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும், இதனால் உரிமைத் தொகை உயர்வு மேலும் தள்ளிப்போகக்கூடும் என்றும் நிதி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.