பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணி அவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மகன் தமிழ் குமரன் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வரும் நிலையில், இந்த ஓய்வு முடிவை ஜி.கே.மணி கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்; அதனைத் தொடர்ந்து, ஜி.கே.மணியும் ராமதாஸ் அவர்களைச் சந்தித்திருப்பது, தனது அரசியல் ஓய்வு முடிவை முறைப்படி அறிவிப்பதற்காகத்தான் என்ற பலத்த கேள்வியையும் விவாதத்தையும் தற்போதைய அரசியல் சூழலில் கிளப்பியுள்ளது.
