டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள விவகாரம், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய தவெகஅரசு அவருக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் புதிய அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்ய தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, மின்சாரத்துறை விஜிலென்ஸ் பிரிவினர் முதற்கட்ட விசாரணையை விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படும் தகவல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
