டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ₹397 கோடி ஊழல் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சிபிஐ புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கால் அவர் ஏற்கனவே கடுமையான சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போதைய தவெக அரசு அவருக்கு மேலும் அழுத்தங்களைத் தரத் தயாராகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய தற்போதைய அமைச்சர் சி.டி.ஆர். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, நிலக்கரி இறக்குமதி மற்றும் கொள்முதலில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய மின்சாரத்துறை விஜிலென்ஸ் (Vigilence) தனது முதற்கட்ட விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜிக்கு, சிபிஐ வழக்கோடு சேர்த்து இந்த புதிய மின்சாரத்துறை விஜிலென்ஸ் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அவருக்குப் புதிய நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
