இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு அரசியல் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய வீரபாண்டியன், தற்போதைய தவெக அரசுக்கு தாங்கள் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளோம் என்றும், தங்களுக்கு எந்தக் கூட்டணியும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதேபோன்ற கருத்துகளைக் கூறி வரும் நிலையில், தற்போது சிபிஐ கட்சியின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால், திமுக கூட்டணி தற்போது நடைமுறையில் இல்லை என்பதையே இந்த அரசியல் நகர்வுகள் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
