அரசியல் பிரிவு தனிச் செயலாளராக Route ஜெகதீஷ் நியமனம்… தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக ‘The Route’ நிறுவனரும், விஜய்யின் முன்னாள் மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அரசாணையைத் தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ளார். கடந்த மே 12-ம் தேதியே இந்த நியமனம் செய்யப்பட்டிருந்தாலும், அதற்கான அரசு உத்தரவு (G.O.) தற்போதே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் குறித்து நெகிழ்ச்சியடைந்த ஜெகதீஷ் பழனிசாமி, “18 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யுடன் புகைப்படம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த தீவிர ரசிகனாக இருந்தேன்; இன்று மாநில முதலமைச்சரின் தனிச் செயலாளராக அவர் அருகில் நிற்பது வாழ்க்கை முழுமையடைந்ததை உணர்த்துகிறது” எனத் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். விஜய் திரையுலகில் இருந்தபோது அவரது மேலாளராகவும், அரசியல் வருகைக்குப் பிறகு அவரது முக்கிய வியூக வகுப்பாளராகவும் ஜெகதீஷ் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.